ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது லீக் போட்டியில் நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதமும், மயாங்க் அகர்வால் சதம் அடித்து நொறுக்கினர்.
அதனை தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் சரியான துவக்கம் கொடுத்து 27 பந்துகளில் அரைசதம் அடித்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து அப்படியே ஆட்டத்தை தன் கையில் எடுத்த சஞ்சு சம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இப்படியே செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் ராகுல் திவதியா என்னும் இளம் வீரர் களமிறங்கினார். இவர் ஹரியானாவைச் சேர்ந்த வேர் முதல் 23 பந்துகளில் வெறும் 17 இடங்கள் தான் எடுத்து இருந்தார்.
அந்த அணிக்கு 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திடீரென ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎல் அரங்கில் இருக்கும் இவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடியவர் தற்போது தான் ஒரு போட்டியில் களம் இறக்கப்பட்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
மேலும் ஆறு ஆண்டுகளாக தன் திறமையை நிரூபிக்க முடியாமல் தவிப்பதாகவும் கிரிக்கெட் உலகம் தன்னை புறக்கணித்ததாக தெரிவித்திருக்கிறார். ரஞ்சிப் போட்டியில் கூட இந்த ஆறு ஆண்டுகளில் 9 போட்டிகளில் மட்டுமே ஹரியானா தன்னை விளையாட வைத்ததாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.