இந்திய டி20 அணியில் நான் தேர்வானதை இவர்தான் என்னை எழுப்பி சொன்னார் – ராகுல் திவாதியா பேட்டி

Tewatia

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது.இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிடம் விளையாடி உள்ளது.அதில் ஒரு போட்டியில் இங்கிலாந்தும் மற்ற இரண்டு போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் நடக்க உள்ள டி20 தொடருக்கான வீரரகள் பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது.டி.20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ;

INDvsENG

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வைஸ் கேப்டன்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்( விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ராகுல் திவாடியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

இந்த பட்டியலில் சில புது வீரர்கள் முதன் முறையாக இந்தியா அணியில் உடம் பிடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா ஆகியோர் முதன் முறையாக இந்தியா ஜெர்சி அணிய உள்ளனர்.இவர்களுக்கு பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் உள்ளனர்.

ராகுல் தெவாட்டியா சென்ற வருடம் ஐ.பி.எல் தொடரில் ஒரு நல்ல ஆல் ரவுண்டராக தன் திறமையை எல்லோருக்கும் வெளிப்படுத்தினார். குறிப்பாக ரஷித் கான் ஓவரில் சென்ற ஆண்டு ஹாட்டிரிக் ஃபோர்களையும் செல்டன் காட்டெரல் ஒவரில் ஐந்து சிக்சர்களையும் விளாசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவரது திறமையைக்கு ஒரு வாய்ப்பாக இங்கிலாந்துடனான டி20 தொடருக்கு இந்தியா இவரை தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

Tewatia-1

இந்நிலையில் இவர் இந்திய அணியில் தேர்வான நேரம் நடந்த விஷயத்தை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் : “நான் அந்த நேரம் தூங்கி கொண்டு இருந்தேன் அப்பொழுது சஹால் தான் என்னை எழுப்பி நீ இந்திய அணியில் இடம் பிடித்து விட்டாய் என்று கூறினார். இதை கேட்டவுடன் நான் கிண்டல் பண்ணாதீங்க என்று கூறினேன். அதன் பின்னர் மோஹித் சர்மா கூறிய பின்பு தான் அது உண்மை என்று உறுதிபடுத்தினேன. இந்திய அணியில் தேர்வானது மிக ஆனந்தமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தன் பேட்டியை முடித்துக் கொண்டார்.