விராட் கோலி எனக்கு அவரது டீ-சர்ட்டை பரிசாக அளிக்க இதுவே காரணம் – ராகுல் திவாதியா கொடுத்த விளக்கம்

Tewatia
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. இந்த போட்டியில் படிக்கல் மற்றும் கோலி ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி எளிதாக சேசிங் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ராஜஸ்தான் அணியின் தற்போதைய நட்சத்திரமாக மாறியுள்ள ராகுல் திவாதியாவிற்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு பரிசு ஒன்றினை அளித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

அதாவது தற்போதைய நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சாதித்து வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டராக திகழும் ராகுல் திவாதியா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஒரே இரவில் ஹீரோவாக மாறினார்.

Tewatia-1

அதாவது 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இறுதிவரை நின்று 5 அதிரடி சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் ராகுல் திவாதியா அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு நேற்றைய போட்டி முடிந்ததும் தோல்வி அடைந்தாலும் கோலி அவரை பாராட்டி பரிசு ஒன்றினை வழங்கியுள்ளார்.

- Advertisement -

ஆர்சிபி கேப்டன் கோலி அவரது கையெழுத்திட்ட அவரது ஜெர்சி ஒன்றினை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் திவாதியா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tewatia

இந்நிலையில் தற்போது தான் விராட் கோலியிடம் இருந்து ஜெர்சியை பெற்றதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வீரர் என்பதால் அவரிடம் இருந்து ஒரு ஜெர்சியை பெற ஆசைப்பட்டு அவரிடம் உங்களது ஜெர்சியை தர முடியுமா ? என்று கேட்டேன். அவரும் சற்றும் யோசிக்காமல் தருகிறேன் என்று கூறிவிட்டு ஓய்வறை சென்று தனது ஜெர்ஸியை எடுத்து வந்து அதில் எனக்கு கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். அவர் ஒரு அற்புதமான வீரர் அவரது இந்த பரிசு எனக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது என்று திவாதியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement