அப்படி அடிப்பாரு..இப்படி அடிப்பாருனு பாத்தா.. கடைசில இப்படி மோசமா ஆடுறாரு – சிக்கலில் ராஜஸ்தான் அணி

Tewatia-4

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவாட்டியா அதன் பின்னர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு இந்திய அணியில் கூட ஒரு முறை ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை

Tewatia-1

அதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை மூன்று போட்டியில் விளையாடுயுள்ள தேவாட்டியா மொத்தமாகவே ஒரு விக்கெட் மட்டும்தான் கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

முதல் போட்டியில் 2 ரன்கள், இரண்டாவது போட்டியில் 19 ரன்கள், மூன்றாவது போட்டியில் 20 ரன்கள் மிகப்பெரிய அளவில் சொதப்பி வருகிறார்.குறிப்பாக நேற்றைய போட்டியில் கண்டிப்பாக ராகுல் சிறிதளவு நின்று ஆடி இருந்தால் நிச்சயமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற்றிருக்கும்.
கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் ராகுல் தேவாட்டியா 5 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு எந்த போட்டியிலும் அந்த அளவுக்கு ஆடவில்லை. இந்த ஆண்டாவது நன்றாக ஆடுவார் என்று அவரை நம்பி 3 போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் அவர் தனது திறமையை நிரூபிக்க தவறி விட்டார்.

- Advertisement -

Tewatia

இதன் காரணமாக இனி அடுத்து வரும் போட்டிகளில் இவரையே விளையாட வைக்கலாமா ? அல்லது வேறு யாராவது சிறந்த ஆல்ரவுண்டர் வீரரை களம் இறக்கலாமா என்பது குறித்து ஆலோசனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் சிலர் இனி வரும் போட்டிகளில் அவர் பழையபடி நன்றாக விளையாடுவார் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.