அவமானப்பட்ட இடத்திலேயே சாதித்து காட்டி அனைவரையும் கைதட்ட வச்ச திவாதியா – விவரம் இதோ

Tewatia-4
- Advertisement -

நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 223 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 பந்துகள் மிச்சம் இருக்கும் நிலையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

rrvskxip

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி நேர அதிரடியில் ராகுல் திவாதியா சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இருப்பினும் இந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும்போது சில அவமரியாதைகள் ஏற்பட்டன. ஏனெனில் ராபின் உத்தப்பா, ரியான் பராக் ஆகியோர் பின்னால் இருக்கும் வேளையில் முன்னதாக அனுப்பப்பட்ட அவர் லெக்ஸ் ஸ்பின்னர்களை அடித்து ஆட முடியும், சிக்சர்களை அடிக்கும்படியும் பயிற்சியாளர் கூறி அனுப்பி வைத்தார்.

ஆனால் ராகுல் திவாதியா ஆரம்பகட்ட பந்துகளை அடிக்க முடியாமல் சற்று அதிகமாக திணறினார். இதனால் எதிரில் இருந்த சஞ்சு சாம்சனுக்கு ரன்கள் அடிக்க வேண்டிய அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது. மேலும் ரன்ரேட் உயர்ந்ததால் ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் 2 சிக்சர்களை அடித்து விட்டு மூன்றாவது பந்தை தரையோடு அடித்தார். அந்த பந்து பவுண்டரி லைன் வரை சென்றும் சாம்சன் ரன் ஓடவில்லை.

rr

அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்று அந்த சிங்கிளே வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். இதனால் எதிர் எதிர் முனையில் இருந்த ராகுல் திவாதியாவின் முகம் அவமானத்தால் இறுக காணப்பட்டது ஆனாலும் அவர் உறுதியுடன் இருந்தார். பந்துகளை அடிக்க முடியாமல் போனது ஒருபக்கம் சஞ்சு சாம்சன் ரன் ஓட மறுத்தது என இவை எதையும் அவர் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

Tewatia-1

அதன்பின்னர் வெற்றிக்கு 3 வரை 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18-வது ஓவரில் ஐந்து சிக்சர்களை அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அதுமட்டுமின்றி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அவர் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். தான் அவமானப்பட்ட இடத்திலேயே மீண்டும் ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்களை அடித்து அசர வைத்தார் ராகுல் திவாதியா. அவரது இந்த போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் பல தரப்பட்ட தரப்பிலிருந்தும் குவிந்து வருகிறது.

Advertisement