140 கி.மீ வேகத்தில் வந்த பீமர் பந்து நெஞ்சில் பட்டு சுருண்டு விழுந்த ராகுல் திவாதியா

Tewatia-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15 ஆவது லீக் போட்டி தற்போது அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் லாம்ரோர் 47 ரன்களையும், ராகுல் திவாதியா 24 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய கடைசி ஓவரின் போது பெங்களூரு அணி வீரர் சைனி வீசினார்.

அந்த கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் புல்டாஸ் பந்தை அடிக்க முயன்று நெஞ்சில் பட்டு சுருண்டு விழுந்தார். 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்தை அவர் கணிக்க தவறி நெஞ்சில் அடி வாங்கி வலியால் அப்படியே சுருண்டு விழுந்தார். பிறகு அடுத்து 2 பந்துகளில் சிக்சர் விளாசினார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement