கலீல் அஹமது உடன் சண்டை. வார்னருடன் வாக்குவாதம். களத்தில் சீறிய ராகுல் திவாதியா – என்ன நடந்தது

Tewatia-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Parag-1

அதுமட்டுமின்றி 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியே உறுதி என்ற நிலை வந்தது ஆனால் அந்த அணியின் இளம் வீரர்களான ராகுல் திவாதியா மற்றும் ரியான் பராக் ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றினார்கள். ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்று விளையாடிக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியை கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமையில் இருந்து வெற்றி பெற்று கொடுத்து நேற்றைய போட்டியில் அவர்கள் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக திவாதியா பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியது போன்று நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி ஹீரோவாக திகழ்ந்தார். 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 45 ரன்களும், பராக் 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின்போது 19-வது ஓவரை வீசிய கலீல் அஹமது உடன் சண்டையில் ஈடுபட்டார் ராகுல் திவாதியா.

Tewatia

ஏனெனில் இவர்கள் இருவரும் வெற்றிக்காக மும்முரமாக விளையாடிய போது கலீல் அஹமது 19 ஓவரை வீசினார். அப்பொழுது கலீல் வீசிய பந்தை லெக் சைடில் சிக்ஸ் அடித்து அதன்பின்னர் சிங்கிள் எடுத்து மறுபுறம் ஓடி வந்தார். அப்போது கலீல் திவாதியாவை பார்த்து ஏதோ பேசினார். இதற்கு என்ன பேசினீர்கள் என்னை பார்த்து என்று திவாதியா அவரிடம் கேட்டபோது கலீல் திவாதியா தோள் மீது கை வைத்து தள்ளி விட்டு சென்றார். இதன் பின்னரும் தியாவின் கோபம் அடங்கவில்லை.

khaleel

ஆனால் கலீல் எதுவும் பதில் பேசாமல் சென்றுவிட்டார். அந்த ஓவர் முழுவதும் திவாதியா கோவத்தோடு காணப்பட்டார். அதன் பின்னர் போட்டி இறுதி ஓவரில் முடிவடைந்தவுடன் நேராக சென்று வார்னர் இடமும் இதுகுறித்து கடுமையாக பேசினார். அதன் பின்னர் அம்பயர்கள் இருவரும் வந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் கலீல் திவாதியா தோள்களின் மீது கைபோட்டு நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement