மீண்டும் ஹீரோவான ராகுல் திவாதியா. ரஷீத் கானை பிரித்தெடுத்து அட்டகாசம் – ராஜஸ்தான் த்ரில் வெற்றி

Parag-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

pandey

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். ஏற்கனவே ஒரு போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சாத்தியமற்ற வெற்றியை ஐந்து சிக்சர்கள் அடித்து ஏற்படுத்திக் கொடுத்த திவாதியா நேற்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

parag

அதாவது 12-வது ஓவரில் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற இனி ராஜஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரியான் பராக் மற்றும் ராகுல் திவாதியா வெற்றியை உறுதி செய்தது. அதிலும் குறிப்பாக ரசித் கான் வீசிய ஒரே ஓவரில் 2 ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் ஒரு லாங்ஆன் பவுண்டரி என தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து ரஷித் கானுக்கே அழுத்தம் கொடுத்தார். அதுமட்டுமன்றி இரண்டு சிக்ஸர்களையும் விளாசிய அவர் 28 பந்துகளில் 45 ரன்களைக் குவித்தார்.

Tewatia

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே இரவில் ஹீரோவான இவர் நேற்று தனது அதிரடி மூலம் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்கிறார். அதே போன்று மற்றொரு இளம் வீரரான ரியான் பராக் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் அடித்து தனது நேர்த்தியான ஆட்டத்தை இப்போட்டியில் வெளிக்காட்டினா.ர் இவர்கள் இருவரின் ஆட்டத்தின் மூலம் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement