முக்கியமான அந்த 20 ஆவது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங்கை அழைக்க காரணம் இதுதான் – ராகுல் வெளிப்படை

Arshdeep

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இறுதி ஓவரை பஞ்சாப் அணியின் இளம்வீரரான அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே செல்ல 3 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4 பந்தினை சாம்சன் சிக்ஸர் விளாச மீதம் 2 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் பதற்றம் தொற்றியது. 5 ஆவது பந்தில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் சாம்சன் ரன் ஓடவில்லை.

இறுதி பந்தில் எப்படியாது சிக்ஸ் அடித்து வெற்றிபெறலாம் என்று தூக்கி அடித்த சாம்சன் ஆட்டமிழந்து வெளியேற பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விறுவிறுப்பாகச் என்ற இந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசியது பார்ப்பதற்கே அருமையாக அமைந்தது.

arshdeep 1

இந்நிலையில் இந்த போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் அந்த முக்கியமான கடைசி 20வது ஓவரை வீச தான் ஏன் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை அழைத்தேன் என்பது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் தெளிவான விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்போதும் இக்கட்டான சூழ்நிலைகளில் பந்து வீச நான் அர்ஷ்தீப் சிங்கை அழைப்பேன். அவரும் இந்த கடினமான பிரஷர் சுவிட்சுவேஷனில் பந்துவீச மிகவும் விரும்புவார். மேலும் போட்டி இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவருக்கு இது போன்ற முக்கிய ஓவர்களை பந்து வீசுவது அவ்வளவு பிடிக்கும்.

- Advertisement -

arshdeep 2

எனவே நான் அவரிடம் 20-வது ஓவரை வீச கொடுக்கவேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்து விட்டேன். மேலும் அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அவர் திறமை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே நான் அவருக்கு பந்தை கொடுத்தேன். அவர் சிறப்பாக பந்துவீசி வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். பார்ப்பதற்கே அந்த ஓவர் மிக அருமையாக இருந்தது என ராகுல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.