கோலி கிட்ட இருந்து ரோஹித்துக்கு போச்சி. கடைசில அவர்கிட்ட இருந்து ராகுல் கிட்ட போயிடுச்சி – இதை கவனிச்சீங்களா ?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Rahul 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்து கோலிக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக ரோகித் கேப்டனாக செயல்பட்டார். இளம்வீரர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது வீரராக களமிறங்கி 60 ரன்கள் எடுத்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. ஏற்கனவே கோலி இடமிருந்து கேப்டன்சி பெற்ற ரோஹித் காயமடைந்து வெளியேறியதால் நேற்றைய இரண்டாவது பாதையில் இந்திய அணியின் கேப்டனாக ராகுல் செயல்பட்டார். அவரது முடிவுகளும் நேற்றைய போட்டியில் சிறப்பாக இருந்து வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

Rahul-5

ஏற்கனவே இந்திய அணியில் மூன்றாவது வீரர், ஐந்தாவது வீரர் மற்றும் துவக்க வீரர் என பேட்டிங்கில் ஏகப்பட்ட பரிமாணங்கள் செய்து வரும் ராகுல் கீப்பிங் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வரும் நிலையில் ராகுல் அணி நிர்வாகம் எதனை அளித்தாலும் அதற்காக நான் முழுமையாக செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் கேப்டன் செய்யும் செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Thakur 3

மேலும் கடந்த சில தொடர்கள் ஆகவே வியக்கத்தக்க வகையில் விளையாடி வரும் ராகுல் நேற்றைய கேப்டன் கேப்டன்சியிலும் அசத்தினார் என்று கூறலாம். டி20 உலக கோப்பையில் வருவதையொட்டி இந்திய வீரர்களின் இந்த செயல்பாடு மிக சிறப்பான ஒன்றாக அமைந்தது. டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுதினம் 5ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement