3 ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? போட்டிக்கு பின் – கேப்டன் ராகுல் பகிர்ந்த தகவல்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Elgar

ஏற்கனவே இந்திய அணி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருந்ததால் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் கேப்டன் விராத் கோலியின் விலகல் இந்திய அணியில் பெரிய பாதகமாக அமைந்தது. முதுகு வலி காரணமாக இரண்டாவது போட்டியில் விராத் கோலி விளையாடாததால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியை வழி நடத்தினார்.

- Advertisement -

இப்படி தான் வழி நடத்திய முதல் போட்டியிலேயே ராகுல் தற்போது தோல்வியை சந்தித்து இருக்கிறார். இந்நிலையில் 3-வது போட்டியில் விராத் கோலி மீண்டும் அணியில் இணைந்து போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் விராத் கோலியின் நிலை குறித்து கூறுகையில் :

kohli 1

தற்போது விராட் கோலி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே வலைப்பயிற்சியில் பீல்டிங்கும் செய்து வருகிறார். எனவே அவரது உடல்நிலை தற்போது அடுத்த போட்டிக்கு விளையாடும் அளவிற்கு தயாராக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் அதுவே என்னுடைய விருப்பம் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : படுமோசமாக தோற்றது மட்டுமின்றி பெரிய அவமானத்தையும் சந்தித்த இந்திய அணி – விவரம் இதோ

அவரின் இந்த பேட்டிக்கு பிறகு நிச்சயம் விராட் கோலி அடுத்த போட்டியில் விடுவார் என்றே தெரிகிறது. அது மட்டுமின்றி இரண்டாவது போட்டியில் கோலி விளையாடவில்லை என்றாலும் களத்திற்கு வெளியே நின்று வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement