படுமோசமாக தோற்றது மட்டுமின்றி பெரிய அவமானத்தையும் சந்தித்த இந்திய அணி – விவரம் இதோ

Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த மூன்றாம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் குவித்தனர். இதன்காரணமாக 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியானது 266 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சில் ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும், விஹாரி ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தனர்.

rahane

- Advertisement -

பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தென்ஆப்பிரிக்கா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவு வரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 118 ரன்கள் குவித்திருந்தது.

இதன்காரணமாக இந்த போட்டியின் வெற்றிக்கு 2 நாட்கள் மீதமிருக்க 122 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்நிலையில் 46 ரன்களுடன் நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த டீன் எல்கர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார். அதேவேளையில் வேண்டர் டுசைன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எல்கர் மற்றும் பவுமா ஆகியோர் இறுதிவரை விக்கெட்டுகள் சரிய விடாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Bavuma

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது மட்டுமன்றி சில மோசமான சம்பவங்களையும் சந்தித்துள்ளது. அதன்படி இதுவரை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் தோல்வியையே சந்தித்தது இல்லை என்ற வரலாறு மாறி இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி விராட் கோலி இல்லை என்றால் நிச்சயம் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த வேளையில் தனது முதல் போட்டியிலேயே கேப்டன் ராகுல் தோல்வியை சந்தித்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை தூக்கிட்டு இவரையே விளையாட வையுங்க – குரல் கொடுத்த கம்பீர்

இப்படி சில சறுக்கல்களை இந்திய அணி சந்தித்திருக்கிறது. இருப்பினும் மூன்றாவது போட்டியில் விராட் கோலி அணியில் இணைந்து விடுவார் என்பதால் நிச்சயம் அடுத்தப்போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக போராடும். அதேவேளையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement