தோனிக்கு பிறகு இந்த சாதனையை ராகுல் மட்டும் தான் பண்ணிருக்காராம். அப்போ பண்ட் கதை அவ்ளோதானா – விவரம் இதோ – INDvsNZ

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

indvsnz

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ராகுல் சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களும், மனிஷ் பாண்டே 42 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி விளையாட தயாராகி வருகிறது.

இந்த போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மனிஷ் பாண்டே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் ராகுல் தனது ஆட்டத்தை வேற லெவல் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ராகுல் இன்று அடித்த சதம் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 4 ஆவது சதமாகும். மேலும் இந்த சதத்தின் மூலம் தோனிக்கு பிறகு 5 இடத்தில் களமிறங்கி சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

Rahul

அதன்படி இந்திய அணி வீரர் ஒருவர் 5 ஆவது மற்றும் அதற்க்கு பின்னர் இறங்கி சதமடிப்பது இதுவே 3 ஆண்டுகளில் முதன்முறையாகும். கடைசியாக தோனி இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற போட்டியின்போது 134 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது ராகுல் 5ஆவது வீரராக களமிறங்கி அடித்துள்ளார் அதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பண்ட்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிவரும் ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு கீப்பிங்கிலும் அசத்தி வருவதால் பண்டின் நிலைமை அவ்வளவு தானா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement