தோனி மட்டுமல்ல ஐ.பி.எல் இல்லாததால நானும் கஷ்டப்படரேன். இந்திய அணியின் நட்சத்திர வீரர் பேட்டி

Rahul-2
- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நட்சத்திர வீரருமான மஹேந்திர சிங் தோனி தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்ற இவரது கனவு வீணாகியது.

- Advertisement -

தோனிக்கு பதிலாக தற்போது கீப்பிங் செய்துவரும் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விளையாடி வருகிறார். டி20 போட்டியில் தொடக்க வீரராகவும், ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரரிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட இருக்கும் ராகுல் இந்த ஐபிஎல் தொடர் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த இந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

Rahul

இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் பொறுப்பை ஏற்ற ராகுல் கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரை மிகவும் மிஸ் செய்கிறேன். ஐபிஎல் தொடரை நடந்திருந்தால் எனக்குப் பெரும் மிகப்பெரிய திருப்புமுனை தொடராக இது அமைந்திருக்கும் ஏனென்றால் முதன்முறையாக ஒரு பெரிய தொடருக்கு கேப்டன் பொறுப்பு ஏற்கிறேன்.

rahul

அதுமட்டுமில்லாமல் அந்த அணியில் ஆடும் சிறந்த வீரர்களும் ஏலத்தின் வாயிலாக அணியில் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் கெயில் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோருடன் ஆடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். தற்போது வரை ஐ.பி.எல் நடக்காததால் மிஸ் செய்கிறேன் என்று ராகுல் பகிர்ந்துள்ளார்.

Advertisement