2 ஆவது டெஸ்ட் தோல்வி : ரிஷப் பண்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிராவிட் – பரபரப்பு தகவல்

Dravid
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் கடந்த 3-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

pant

இந்நிலையில் இந்த போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. ஏனெனில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி நல்ல நிலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது முக்கியமான பேட்ஸ்மேனான அவர் அனாவசியமாக தனது விக்கெட்டை தாரைவார்த்து சென்றது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : ரிஷப் பண்ட் ஒரு அதிரடியான வீரர் என்பது நாம் அறிந்ததே. அதன் மூலமே அவருக்கு பல சக்சஸ்-ஸும் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது இந்த அதிரடி அணிக்கும் பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது. ஆனாலும் தற்போது அவர் நிறைய முன்னேறி விட்டார் அவர் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொண்டு தான் ஆக வேண்டும். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அவர் கவனம் செலுத்தி விளையாட வேண்டியது அவசியம்.

அந்த வகையில் நான் அவரிடம் அமர்ந்து பேச இருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது தவறு கிடையாது. ஆனால் அதற்கேற்ற சந்தர்ப்பத்தையும், ஷாட் செலக்ஷன்களிலும் அவர் இனி அதிக கவனத்தை கொள்ள வேண்டும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முதலில் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பந்துகளை சந்தித்து களத்தில் செட்டில் ஆகும் பட்சத்தில் அவர் தேவையான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி தனது அதிரடியை காண்பிக்கலாம்.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? போட்டிக்கு பின் – கேப்டன் ராகுல் பகிர்ந்த தகவல்

ஆனால் இன்னிங்ஸ் துவங்கியதும் இதேபோன்று அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைப்பது அனாவசியமான ஒன்று, அப்படி செயல்படுவது தவறு என்றும் இந்த விஷயத்தில் நிச்சயம் ரிஷப் பண்ட் உடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனைகளை வழங்குவோம் என ராகுல் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement