அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே 500 விக்கெட்ஸ் எடுத்த அஸ்வினை பாத்து கத்துக்கோங்க.. குல்தீப்புக்கு டிராவிட் அட்வைஸ்

Rahul Dravid 3
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்தத் தொடரில் தரம்சாலாவில் நடந்த கடைசி போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரராக சாதனை படைத்தார். அதில் மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் தனது 100வது போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

அத்துடன் உலகிலேயே அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் இந்த தொடரில் படைத்த அவர் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையையும் உடைத்தார்.

- Advertisement -

டிராவிட் அட்வைஸ்:
ஆனால் இவ்வளவு உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் வெளிநாட்டு மண்ணில் அவரை விளையாட வைக்க யோசிக்கும் இந்திய அணி நிர்வாகம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பெஞ்சில் அமர வைத்ததை மறக்க முடியாது. இந்நிலையில் வெளிநாடுகளில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்காது என்பதாலேயே அஷ்வினுக்கு சில சமயங்களில் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதையும் தாண்டி கிடைத்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட 500 விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்ததாக டிராவிட் பாராட்டியுள்ளார். எனவே தற்சமயத்தில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத குல்தீப் யாதவ் ஜாம்பவானாக திகழும் அஸ்வினை பார்த்து வேண்டுமென்று கேட்டுக்கொள்ளும் ராகுல் டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வருடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்”

- Advertisement -

“500 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின் கூட வெளிநாட்டு போட்டிகளில் அதிகமாக விளையாடியதில்லை. ஏனெனில் வெளிநாடுகளில் நமக்கு வித்தியாசமான மைதானங்கள் தான் கிடைக்கின்றன. தற்போது ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணிகள் ஸ்பின்னராக விளையாடுவதால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது”

இதையும் படிங்க: ரொம்ப ஆடாம நிகழ்காலத்துக்கு வாங்க.. வம்பிழுத்தா சும்மா விடமாட்டோம்.. மோதிக்கொண்ட வங்கதேச – இலங்கை வீரர்கள்

“அக்சர் படேல் கூட கிடைத்த வாய்ப்புகளில் எங்களுக்கு நன்றாகவே செயல்பட்டுள்ளார். அந்த 2 வீரர்களுமே பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்துகின்றனர். குறிப்பாக குல்தீப் தன்னுடைய பேட்டிங்கில் வேலை செய்து முன்னேறியுள்ளது எங்களுக்கு போனஸாகும்” என்று கூறினார். இந்த வகையில் இந்த தொடரில் அஸ்வினுக்கு நிகராக அசத்திய குல்தீப் யாதவ் வரும் காலங்களில் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement