15 வருஷம்.. 110 டெஸ்ட் போட்டியில் விளையாடியும் விராட் கோலியின் இந்த குணம் மாறவில்லை – ராகுல் டிராவிட் வெளிப்படை

Dravid-and-Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-ஆவது போட்டியில் பங்கேற்று விளையாடும் இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் அடுத்த மாதம் தனது பதினைந்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் அவர் இன்னும் இந்திய அணியின் முன்னணி வீரராகவே திகழ்ந்து வருகிறார்.

Kohli

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் இவ்வேளையில் மிகச் சிறப்பான ஃபார்மில் கோலி விளையாடி வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வெற்றிப்பயணம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் :

110 டெஸ்ட் போட்டிகள், 15 ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டை பார்த்த பிறகும் இன்னமும் விராட் கோலி முழு அர்ப்பணிப்புடனும், உழைப்புடனும் விளையாடி வருவது நம்ப முடியாதபடி இருக்கிறது. அவருடைய இந்த குணம் இன்னும் மாறாமலே இருந்து வருகிறது. கிரிக்கெட்டுக்காக அவர் அனைத்தையும் செய்து வருகிறார். இந்திய அணியில் இருக்கும் பலவீரர்கள் அவரையே பின்பற்றுகின்றனர். அந்த அளவிற்கு அவர் கிரிக்கெட் மீது மரியாதையையும், கடின உழைப்பையும் தந்து வருகிறார்.

Virat Kohli

அவரது இந்த குணமே அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. கிரிக்கட்டர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கும் விராட் கோலி ரோல் மாடலாக இருந்து வருகிறார். அவரது ரன்களும், புள்ளி விவரங்களுமே அவரது தரத்திற்கு சான்று. இன்னும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இவற்றிற்கெல்லாம் பின்னர் அவர் எடுக்கும் பயிற்சி மற்றும் உழைப்புதான் அவரது இந்த வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் இன்று அவரை 500-ஆவது சர்வதேச போட்டியில் விளையாட வைத்துள்ளது என்று டிராவிட் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி இன்னும் வலிமையாகவே இருக்கிறார்.

இதையும் படிங்க : இது நம்ம பிசிசிஐ தானா? பும்ரா, பண்ட், ராகுல் உட்பட 5 வீரர்களின் காயம் பற்றிய மெகா அப்டேட் வெளியீடு – ரசிகர்கள் மகிழ்ச்சி

12-13 வருடங்களை கடந்தும் இத்தனை போட்டிகளில் விளையாடிய பிறகும் அவருடைய எனர்ஜி மற்றும் உற்சாகம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. இவரைப்போன்ற ஒரு வீரரிடமிருந்து இளம் வீரர்கள் நிச்சயம் உத்வேகம் பெறுவார்கள். விராட் கோலியுடன் ஓய்வறையை பகிரும் இளம் வீரர்கள் அவரிடம் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அதனை நானும் அவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement