3 ஆவது டெஸ்ட் போட்டியிலாவது விராட் கோலி விளையாடுவாரா? மாட்டாரா? – பயிற்சியாளர் டிராவிட் அளித்த பதில்

Dravid-and-Kohli
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது விராட் கோலி இடம் பிடித்திருந்தார். ஆனால் இந்த தொடர் துவங்க சில நாட்களே இருந்த வேளையில் அவர் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். அப்படி முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்ட போது வெளியேறிய கோலி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது மீண்டும் திரும்புவார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த வேளையில் இரண்டாவது போட்டியில் எப்படியோ வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து விட்டது.

- Advertisement -

ஆனாலும் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளதால் இந்தத் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? கைப்பற்றாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் முகமது ஷமி, விராட் கோலி, கே.எல் ராகுல், ஜடேஜா போன்ற வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் வெளியேறியுள்ளனர். இங்கிலாந்து அணியோ ஒரு பலமான அணியாக திகழ்ந்து வருகிறது.

இதன் காரணமாக எஞ்சியுயுள்ள மூன்று போட்டிகளில் நிச்சயம் விராட் கோலி அணிக்கு தேவை என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடிப்பாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி குறித்த கேள்வியை நீங்கள் தேர்வுக்குழுவினரிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தான் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க போகிறார்கள், எனவே அவர்கள் தான் அதற்கு பதில் சொல்ல முடியும். இருப்பினும் நாங்கள் விராட் கோலியை தொடர்பு கொண்டு அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதி செய்வோம்.

இதையும் படிங்க : நாங்க வேணும்னு செய்யல.. அது எங்க வேலையும் இல்ல.. சௌரவ் கங்குலிக்கு கோச் டிராவிட் பதில்

இன்னும் ஒரு சில நாட்களில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என டிராவிட் கூறினார். ஏற்கனவே வெளியான தகவலின் படி விராட் கோலி அவரது இரண்டாவது குழந்தை பிறப்பதன் காரணமாகத்தான் விடுப்பு எடுத்துள்ளார் என்று ஏ.பி.டி வில்லியர்ஸ் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement