
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உள்ளேயும் வெளியேயும் விளையாடி வருவதால் அந்த அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இனிவரும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக இனிவரும் போட்டிகள் அனைத்தும் அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன. இந்த தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் சிறப்பாக துவங்கியும் வெற்றிக்கு அருகருகில் சில போட்டிகளை அந்த அணி தவறவிட்டது மிகப்பெரிய ஏமாற்றத்தை அவர்களுக்கு அளித்திருக்கும். தற்போது அந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கடினமாகியுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் இங்கிருந்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். எனவே இனிவரும் எந்த போட்டிகளிலும் நாங்கள் சிறிய தவறை கூட செய்ய வாய்ப்பே கிடையாது. இந்த தொடரின் பாதி தூரம் கடந்துள்ள நாங்கள் புள்ளி பட்டியல் கீழே உள்ளதால் இனி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை நோக்கி செல்ல முடியும்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் எப்போது ராஜஸ்தான் அணிக்கு திரும்புவார்? ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட் – விவரம் இதோ
பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமெனில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருக்கும் வேளையில் நாங்கள் நிச்சயம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.