9 ஆவது அணியை இணைப்பதன் மூலம் நிச்சயம் இந்த நல்ல விஷயம் நடக்கும் – டிராவிட் நம்பிக்கை

Dravid
Dravid

நடப்பு ஆண்டின் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முடிவில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்த தொடருக்கான வரவேற்பு கடந்த பல ஆண்டிகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

mi

இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு அணியை ஒன்பதாவதாக இணைக்கும் திட்டம் பிபிசியிடம் இருப்பதாக தெரிகிறது. அதேபோன்று அதற்கடுத்த இரண்டு வருடங்களில் அதாவது 2023 ஆம் ஆண்டு 10 அணிகள் களம் இறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த புதிய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவருமான ராகுல் டிராவிட் கூறியதாவது : இந்த ஒன்பதாவது புதிய அணியினை உருவாக்குவதன் மூலம் பல இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள். அதுமட்டுமின்றி வாய்ப்பின்றி இருக்கும் பல உள்ளூர் வீரர்களுக்கு இந்த புதிய அணி மூலம் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

rahul-dravid

மேலும் கிரிக்கெட் உலகில் இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த அமையும் வாய்ப்பாக இது இருக்கும். அதனால் ஐபிஎல் தொடரில் புதிய அணியை உருவாக்குவது சாத்தியம் என்று கூறியுள்ளார். மேலும் இப்படி புதிய அணி உருவாகும் போது சிறந்த தரமான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

RAHUL DRAVID

மேலும் அதுமட்டுமின்றி 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் தொடர் தான் என ராகுல் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.