ஒவ்வொரு பார்மேட்டிற்கும் தனித்தனி கேப்டன்களா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலளித்த – ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் கைப்பற்றிய வேளையில் நாளை ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

Shardul Thakur 1

- Advertisement -

அதே வேளையில் கவுரவமான வெற்றிக்காக நியூசிலாந்து அணியும் தயாராக இருப்பதினால் நாளைய போட்டியின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் விளையாடாமல் இருக்கின்றனர்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்களுக்கு எதிரான டி20 தொடர்களில் அவர்கள் இருவரும் விளையாடாததால் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு அந்த தொடர்களை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது எதிர்வர இருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் ரோஹித் சர்மா மற்றும் கோலி இடம்பெறாத வேளையில் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Hardik-Pandya

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்காக தற்போதைய அணியே வலுவாக தயார்படுத்த வேண்டும் என்றும் இதே போன்ற அணியையே டி20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் பலரது மத்தியிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அப்படி சீனியர் வீரர்கள் வெளியேறும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு ஃபார்மேட்டிற்கும் ஒவ்வொரு கேப்டன் நியமிக்கப்படுவார்களா? என்பதே பலரது மத்தியிலும் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது தனது வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது வெவ்வேறு கேப்டன்கள் என்கிற திட்டத்திற்கு எல்லாம் இடமில்லை. அப்படி ஒரு திட்டமும் எங்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

இதையும் படிங்க : IND vs NZ : இந்த நியூசிலாந்து தொடர்ல அவங்க 2 பேரை தவிர வேறயாரும் சரியா ஆடல – வாசிம் ஜாபர் கருத்து

இதுபோன்ற விடயங்கள் குறித்து நாங்கள் யோசிக்கவும் இல்லை என்று அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நடைபெற்ற சில டி20 தொடர்களில் இடம் பெறவில்லை என்றாலும் முக்கியமான நேரத்தில் அணிக்கு திரும்புவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement