வாய்ப்புக்காக இந்திய அணியின் கதவினை தட்டவில்லை. உடைக்கிறார் – தமிழகவீரரை பாராட்டிய ராகுல் டிராவிட்

Dravid-1
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை தொடர்ந்து அடுத்ததாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதே வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களை கொண்ட முதன்மை அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சென்று ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

IND vs RSA Pant Chahal

இந்த இரு தொடர்களையும் அடுத்து உலக கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் மட்டுமே இடையில் இருப்பதனால் இந்த நான்கு தொடர்களை வைத்து எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை ஐ.சி.சி யிடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்பதனால் இந்த தொடர்களின் முடிவின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்ய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தயாராக காத்திருக்கிறார்.

Dinesh Karthik vs RSA

இந்நிலையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பிடித்தார். அப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் 4 போட்டிகளில் விளையாடி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன்(158.6) 92 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி தினேஷ் கார்த்திக்கின் அசத்தலான ஆட்டம் காரணமாக தற்போது அயர்லாந்து அணிக்கெதிரான தொடரிலும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த தொடரிலும் தினேஷ் கார்த்திக் அசத்தும் பட்சத்தில் உலககோப்பை அணியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs RSA : தோனியின் பயணத்தையும் தாண்டி வந்திருப்பது அபாரமானது – தினேஷ் கார்த்திக்கை பாராட்டும் முன்னாள் வீரர்

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த கம்பேக் குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில் : தினேஷ் கார்த்திக்கின் இந்த வருகை எங்களது அணியின் பணியை சுலபமாக்கி உள்ளது. நான் எப்போதுமே வீரர்களிடம் டி20 உலகக் கோப்பை அணிக்கான கதவுகளை தட்ட வேண்டாம். ஓங்கி அடித்து உடையுங்கள் என்று கூறுவேன். அந்த வகையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக அணியின் கதவை தட்டாமல் உடைத்து வருவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement