தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் தேர்வு செய்ததே இதுக்காகத்தான் – தெளிவான விளக்கம் கொடுத்த டிராவிட்

Dravid
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 9-ஆம் தேதி துவங்குகிறது. நாளை மறுதினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த முதலாவது டி20 போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் எவ்வாறு செயல்படப் போகிறார்? அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

karthik

கிட்டத்தட்ட தினேஷ் கார்த்திக்கின் கரியர் 2019 உலகக் கோப்பைத் தொடரோடு முடிந்தது என்று அனைவரும் நினைத்த வேளையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் தனது அசாத்தியமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கார்த்திக் இந்தத் தொடரில் எவ்வாறு செயல்படப் போகிறாரோ அதை வைத்துதான் டி20 உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

- Advertisement -

மேலும் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக இன்னும் இரண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவது மட்டுமின்றி அணிக்கு கோப்பையை கைப்பற்றி தரவேண்டும் என்றும் கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் இந்த டி20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் டிராவிட் தினேஷ் கார்த்திக்கின் ரோல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

karthik

அந்த வகையில் நிருபர்கள் கேட்ட கேள்வியாவது : தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் என்ன ரோலில் விளையாடப்போகிறார் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிராவிட் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானதற்கு காரணமே ஆர்.சி.பி அணியில் அவர் தனது அதிரடியை வெளிப்படுத்தியது தான். அதன் காரணமாகவே அவருடைய கம்பேக் தற்போது இருந்துள்ளது.

- Advertisement -

இதன் மூலம் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கிற்கு அவருடைய ரோல் என்னவென்று தெரிந்திருக்கும். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் களமிறங்கி மிக அதிரடியாக விளையாடி வருகிறார். ஆர்.சி.பி அணிக்காக அவர் செய்த ரோலை தான் இந்திய அணியிலும் செய்யப்போகிறார். டெத் ஓவர்களில் இறங்கி பினிஷிங் செய்யும் ரோலில் தான் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படுவார் என்று ராகுல் டிராவிட் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : தெ.ஆ தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படாதது ஏன் – பயிச்சியாளர் டிராவிட் விளக்கம்

டிராவிட் அளித்துள்ள இந்த பதிலின் மூலம் நிச்சயம் தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலும் பினிஷர் ரோலை தான் செய்யப்போகிறார் என்று தெரிகிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 183 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 330 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement