தெ.ஆ தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படாதது ஏன் – பயிச்சியாளர் டிராவிட் விளக்கம்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அப்படி விராட் கோலி இந்திய அணியின் மூன்று வகையான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறிய பின்னர் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக அனுபவ வீரரான ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் வேளையில் அவரது தனிப்பட்ட பேட்டிங் பார்ம் மோசமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் மீது கடந்த சில மாதங்களாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Rohith

- Advertisement -

அதோடு நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தினை பெற்று வெளியேறி உள்ளதால் தற்போது ரோஹித் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அவர் விளையாடி வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியின் கேப்டன் பதவி இளம் வீரரான கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஜூன் 9ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ராகுல் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது.

rohith 1

ரோஹித்துடன் சேர்த்து அணியின் சீனியர் வீரர்களான கோலி, பும்ரா, ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது ரோகித் இந்த தொடரில் சேர்க்கப்படாதது ஏன் என்று நிருபர்கள் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த டிராவிட் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்து விதமான பார்மெட்களிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது. ஏனெனில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடும் அவர் புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டும் என நிர்வாகம் நினைக்கிறது. எனவே தற்போது பெரிய தொடரில் விளையாடி வெளியேறிய அவருக்கு சிறிது நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ராக்கெட் வேகம் ! ஒரே வருடத்தில் விராட், வில்லியம்சன், ஸ்மித்துக்கு டாட்டா காட்டிய ரூட் – அசத்தும் புள்ளிவிவரம்

அதனால் சிறிது ஓய்விற்கு பின்னர் அவர் இந்திய அணியில் இணையும் பட்சத்தில் அவர் புத்துணர்ச்சியோடு இருப்பார் என்பதன் காரணமாகவே இந்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இந்த ஓய்வினை சரியாக பயன்படுத்தி மீண்டும் அணிக்கு பலமாக திரும்புவார் என்றும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement