பேசாம சின்ன பசங்களுக்கு பதிலா சீனியர்கள எடுத்திருக்கலாமோ – சொதப்பிய இந்திய பவுலிங் பற்றி ராகுல் டிராவிட் பேசியது என்ன

- Advertisement -

புனே கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 5ஆம் தேதியன்று இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 206/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிஷாங்கா 33, குசால் மெண்டிஸ் 52, அஸலங்கா 37, சனாகா 56* ரன்களை அதிரடியாக குவித்தனர். அதைத் தொடர்ந்து 207 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 2, சுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, கேப்டன் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

IND vs SL Axar PAtel

- Advertisement -

அதனால் 57/5 என சரிந்த இந்தியாவை 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய சூரியகுமார் யாதவ் 51 ரன்களும் முழுமூச்சுடன் போராடிய அக்சர் பட்டேல் 65 (31) ரன்களும் சிவம் மாவி 26 (15) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் 20 ஓவர்களில் இந்தியாவை 190/8 ரன்களுக்கு மடக்கி பிடித்து சிறப்பான வெற்றி பெற்ற இலங்கை 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தக்க பதிலடி கொடுத்துள்ளது.

சின்ன பசங்க:
முன்னதாக இப்போட்டியில் பந்து வீச்சில் 15.5 ஓவரில் 138/5 என இருந்த இலங்கை 206 ரன்கள் விளாசும் அளவுக்கு டெத் ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் படுமோசமாக இருந்தது. அது போக ஆரம்பத்திலேயே ஹாட்ரிக் நோ-பால்கள் உட்பட 12 பந்தில் 5 நோ-பாலை வீசி 37 ரன்களை அர்ஷிதீப் சிங் வாரி வழங்கினார். அதுவும் போக சிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகிய இதர வேகப்பந்து வீச்சாளர்களும் 8 ஓவர்களில் 101 ரன்களை கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Arshdeep SIngh No Ball

போதாக்குறைக்கு இஷான் கிசான், கில் போன்ற இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றதும் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் யாருமே வேண்டுமென்று நோபால், ஒயய்ட் போன்ற பந்துகளை வீச மாட்டார்கள் என்று தெரிவிக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த தோல்விக்காக அனுபவமில்லாத இளம் வீரர்களை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“யாருமே வேண்டுமென்று ஒய்ட் அல்லது நோ-பால்களை வீச மாட்டார்கள். ஆனால் அது போன்ற பந்துகள் டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு தோல்வியை கொடுத்து விடும். இருப்பினும் இந்த இளம் குழந்தைகளிடம் நாம் சற்று பொறுமையை காட்ட வேண்டும். நமது அணியில் குறிப்பாக பந்து வீச்சு துறையில் நிறைய இளம் குழந்தைகள் விளையாடுகிறார்கள. அவர்களுக்கு இது போல் சில போட்டிகள் அமைய தான் செய்யும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”

Dravid

“அவர்களுக்கு நுணுக்கங்கள் ரீதியாக நாம் ஆதரவு கொடுத்து பாதுகாப்பான சூழ்நிலையில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் இயற்கையாகவே நுணுக்கங்கள் நிறைந்த அவர்கள் தற்போது கற்றுக் கொண்டு வருகிறார்கள். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் கற்றுக் கொள்ளும் போது இது போன்ற கடினமான நேரங்கள் வரும் என்பதால் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்கவீடியோ : ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அக்சர் படேல் – டிகே, தோனியை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

அவர் கூறுவது போல ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி போன்ற அனுபவம் மிகுந்த சீனியர் பவுலர்களே ரன்களை வாரி வழங்கி இங்கிலாந்தின் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டனர். எனவே சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் அறிமுகமாகி இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு பெறாத நிலையில் இது போன்ற கடினமான தோல்விகள் தான் அவர்களையும் மேட்ச் வின்னர்களாக உருவெடுக்க உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement