அயர்லாந்து அவங்களையே தோற்கடிச்சவங்க.. ஓப்பனிங்கில் களமிறங்கப் போவது யார்? ராகுல் டிராவிட் பதில்

Rahul Dravid 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 5ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளில் அயர்லாந்து அணி கொஞ்சம் கத்துக்குட்டியாகவும் பலவீனமான அணியாகவும் பார்க்கப்படுகிறது.

மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற தரமான வீரர்களை கொண்ட இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. எனவே அயர்லாந்தை வீழ்த்தி இப்போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என்று நம்பப்படுகிறது. அந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சஞ்சு சாம்சனை விட சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

டிராவிட் பதில்:
இருப்பினும் ஓப்பனிங்கில் விராட் கோலி – ரோஹித் சர்மா அல்லது ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் களமிறங்குவார் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்று பயிற்சியளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் ஓப்பனிங் ஜோடியை சூழ்நிலையை பார்த்து விட்டு தேர்வு செய்ய உள்ளதாகவும் டிராவிட் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி தயாராவோமோ அதே போல இந்த போட்டிக்கும் நாங்கள் தயாராகிறோம். எங்களுடைய பயிற்சிகளில் எந்த குறைவும் கிடையாது. ஏனெனில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியை அயர்லாந்து வீழ்த்தியதை நாங்கள் அறிவோம். அவர்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுகிறார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எந்த அணியையும் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே நாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. 3 வெவ்வேறு ஜோடியை கொண்ட அணியை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். எனவே போட்டி நாளன்று எந்த மாதிரியான சூழ்நிலை இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் எங்களுடைய ஜோடியை தேர்ந்தெடுப்போம்”

இதையும் படிங்க: இந்தியா – அயர்லாந்து போட்டி நடக்கும் நியூயார்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அதற்கு தேவையான வீரர்கள் எங்களிடம் இருக்கின்றனர். எனவே எங்களுடைய அணியை இப்போது நாங்கள் வெளியிட விரும்பவில்லை. ஆனால் எங்களிடம் நல்ல தேர்வுகள் இருக்கிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக உள்ளனர். விராட் கோலி ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக விளையாடினார்” என்று கூறினார். அதனால் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி யார் என்பது டாஸ் வீசிய பின்பே தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.

Advertisement