2024 கர்நாடக டி20 தொடரின் ஏலத்தில் வாங்கப்பட்ட ராகுல் டிராவிட் மகன் சமித்.. தொகை, அணி விவரம்

Samit Dravid
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் விடை பெற்றார். ஒரு வீரராக இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் உலக கோப்பையை மட்டும் வென்றதில்லை. இருப்பினும் தற்போது 2007இல் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக விடை பெற்றுள்ளார்.

முன்னதாக ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். குறிப்பாக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் தன்னுடைய தந்தையிடம் பயிற்சிகளை மேற்கொண்ட அவர் ஏற்கனவே பள்ளி அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது 18 வயதாகும் அவர் கர்நாடகா அண்டர்-19 அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஏலத்தில் சமித் டிராவிட்:
சமீபத்தில் கூச் பெஹர் கோப்பையை கர்நாடகா அண்டர்-19 அணி விளையாடியது. அந்த அணியில் விளையாடி கர்நாடகாவின் வெற்றிக்கு பங்காற்றிய அவர் அடுத்ததாக தங்கள் மாநில டி20 தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். அதாவது டிஎன்பிஎல் போல கர்நாடகாவில் அம்மாநில வாரியம் நடத்தும் மகாராஜா டி20 கோப்பை நடைபெற்று வருகிறது.

அந்தத் தொடரில் 2024 சீசனுக்கான வீரர்கள் எல்லாம் ஜூலை 25ம் தேதி நடைபெற்றது. அந்த ஏலத்தில் சமித் டிராவிட் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக 50000 ரூபாய்க்கு வாங்கப்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான அவரை வாங்கியது பற்றி மைசூர் அணி நிர்வாகி பேசியது பின்வருமாறு. “கர்நாடக அணிக்காக பல்வேறு வயது பிரிவுப் போட்டிகளில் அவர் நிறைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார்”

- Advertisement -

“எனவே இந்த ஏலத்தில் அவர் எங்கள் பக்கம் இருப்பது நல்லது” என்று கூறினார். அதே ஏலத்தில் இந்திய அணிக்காக சமீபத்தில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 1 லட்சத்திற்கு ஏலம் போனார். இதைத் தொடர்ந்து மகாராஜா டி20 கோப்பை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கர்நாடகாவில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் மைசூர் வாரியர் அணிக்காக கருண் நாயர் தலைமையில் சமித் டிராவிட் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: அவருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்.. கவுதம் கம்பீர் உடனான உறவு குறித்து பேசிய – சூரியகுமார் யாதவ்

அந்த வாய்ப்பில் சமித் ட்ராவிட் நன்றாக விளையாடும் பட்சத்தில் வருங்காலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். குறிப்பாக விரைவில் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அல்லது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. எனவே தமது தந்தை தலைமையிலேயே விளையாடும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கலாம்.

Advertisement