இந்திய அணியின் செலக்சனில் அவங்கள ஏமாத்துனது உண்மை தான் – அஸ்வின் கழற்றி விடப்பட்டது பற்றி டிராவிட் பேசியது என்ன?

Rahul Dravid Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டும் ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியது. முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்ட காரணத்தால் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட விராட் கோலிக்கு பதிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

Gavaskar-and-Ashwin

- Advertisement -

அவர்களது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்றதைப் போலவே கொஞ்சமும் முன்னேறாமல் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோற்றது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது.

டிராவிட் ஆதங்கம்:
அதனால் இதுவே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அடித்தார் என்பதற்காக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேனை ஃபைனலில் கழற்றி விடுவீர்களா என்று டிராவிட் – ரோஹித் ஆகிய இருவரையுமே சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதே போலவே ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சுமாராக செயல்பட்ட நிலையில் புஜாரா மட்டும் ஒருதலைபட்சமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்யும் போது சிலர் ஏமாற்றமடைவது போல் தாங்கள் செயல்படுவது உண்மை தான் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Sunil Gavaskar

அதனால் தாம் 100% கச்சிதமாக செயல்படுகிறேன் என்று சொல்ல வரவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பயிற்சிகளை கொடுக்கும் வீரர்களிடம் கிரிக்கெட்டையும் தாண்டி தன்னிச்சையாக சில உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவீர்கள். அதனால் நீங்கள் அவர்களை வீரர்களாக மட்டும் பார்க்காமல் மனிதராக பார்த்து பயிற்சிகளை கொடுக்க வேண்டும். அதை நீங்கள் செய்தால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். அதே சமயம் எதார்த்தத்தை பார்க்கும் போது நீங்கள் தேர்வு செய்யும் அனைவரும் வெற்றிகரமாக செயல்படுவதில்லை. சில நேரங்களில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது”

- Advertisement -

“குறிப்பாக ஒவ்வொரு முறையும் விளையாடும் 11 பேர் அணியை தேர்வு செய்யும் போது நாங்கள் விளையாடாத சிலரை ஏமாற்றுகிறோம். மேலும் ஒவ்வொரு முறையும் ஒரு தொடருக்கு 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படும் போது அதில் இன்னும் சில தரமான வீரர்கள் இருக்க வேண்டுமென்று அனைவரும் கருதுகின்றனர். அதனால் கழற்றி விடப்பட்டவர்களுக்காக நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக சோகத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்தவற்றை முயற்சிக்கிறோம்”

Rahul-Dravid

“அதற்காக நாங்கள் கச்சிதமாக செயல்படுகிறோம் என்று நான் சொல்ல விரும்பவில்லை. குறிப்பாக அனைத்து நேரங்களிலும் நான் சரியாக செயல்படுகிறேன் என்று சொல்லவில்லை. ஏனெனில் அது உங்களை பாதிக்கும். அந்த வகையில் நீங்கள் தலைமையில் இருக்கும் போது சில நேரங்களில் வெற்றிக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் விதிமுறைகளால் நீங்கள் குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறீர்கள். அதற்கான எளிதான விடையும் உங்களிடம் இருக்காது”

இதையும் படிங்க:அவர் நங்கூரமா இல்லனா விராட் கோலி ஸ்டாரா வந்துருக்க முடியாது – கழற்றி விடப்பட்ட நட்சத்திர வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

“எனவே தேர்வுகளில் எப்போதும் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். வீரர்கள் மற்றும் உங்களுக்கான தொடர்புகளில் நேர்மை இருந்தால் எந்த ஒரு அரசியல் நிரல் அல்லது ஒரு தலைபட்சமாக இல்லாமல் செயல்படுகிறீர்கள் என்று அவர்கள் நினைத்தால் அதுவே நீங்கள் நம்பக்கூடிய சிறந்ததாக இருக்கும். அது ஒரு வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement