ஸ்டார்கிற்கு தமிழ் தெரியும்.. உலகிலேயே ஆஸிக்கு கோச்சிங் கொடுத்த ஒரே பிளேயர் அஸ்வின்.. டிராவிட் பேட்டி

Rahul Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் சர்வதேச போட்டிகளில் தனது நாட்டுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே யூடியூப் பக்கத்தில் சேனல் துவங்கிய அவர் ரசிகர்களுக்கு பல்வேறு சுவாரசியமான தகவல்களை கொடுத்தார். அந்த சூழ்நிலையில் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.

அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாட முடியாமல் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. அப்போது “இந்தியாவில் ஸ்பின்னை எப்படி விளையாடுவது” என்ற தலைப்பில் அஸ்வின் வீடியோ வெளியிட்டார். ஆச்சரியப்படும் வகையில் அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்தது. அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் அஸ்வின் வெளியிட்ட வீடியோவை பார்த்து தான் ஆஸ்திரேலியா நம்மை தோற்கடித்ததாக விமர்சித்தனர்.

- Advertisement -

கலாய்த்த டிராவிட்:

இந்நிலையில் சமீபத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் வீடியோவில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது உலகிலேயே ஒரு அணிக்கு விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரணிக்கு பயிற்சியை கொடுத்தது நீங்களாகத்தான் இருக்க முடியும் என்று அஸ்வினை அவர் கலாய்த்தார். இது பற்றி டிராவிட் கூறியது பின்வருமாறு.

“நீங்கள் ஆஸ்திரேலிய அணியை பயிற்சி செய்தீர்கள். அது பற்றிய வீடியோ எனக்கு கிடைத்தது. துரதிஷ்டவசமாக அது தமிழில் இருந்தது. அந்த தமிழ் எனக்கு கொஞ்சம் புரிந்தது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் நடுவே சுழலை எப்படி விளையாடுவது என்பது பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு நீங்கள் பயிற்சி எடுத்தீர்கள். அதைப் பார்த்த எனக்கு தொடர் முடிவதற்குள் அஸ்வின் ஏன் இப்படி செய்கிறார் என்று தோன்றியது”

- Advertisement -

ஸ்டார்க்கிற்கு தமிழ் தெரியும்:

“அதைப் பார்த்த சிலர் “அஸ்வின் உங்களை விட நன்றாக பயிற்சி செய்வதால், நீங்கள் அணியின் என்ன செய்கிறீர்கள்?” என்று என்னிடம் சொன்னார்கள்” எனக் கூறினார். அதைக்கேட்டு சிரித்த அஸ்வின் தம்முடைய வீடியோவை தமிழ் தெரிந்த நபரை வைத்து ஆஸ்திரேலிய அணியினர் புரிந்து கொண்டிருக்கலாம் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் நம்முடைய பையன்கள் சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்வதற்காகவே அதை செய்தேன். நான் ஏன் ஆஸ்திரேலியர்களுக்காக அதைச் சொல்ல வேண்டும்?”

இதையும் படிங்க: 5 முறை உலக சாம்பியன் ஆஸி வரலாறு காணாத மோசமான சாதனை.. 200 கூட தாண்ட விடாத தெ.ஆ

“சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்தூர் போட்டியில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்தை நான் அடிக்காமல் விட்டேன். அப்போது இந்தியா 80/7 என்ற சூழ்நிலையில் உணவு இடைவெளிக்கு சென்றோம். அந்த நேரத்தில் என்னுடன் நடந்து வந்த ஸ்டார்க் ” உங்களுடைய யூடியூப் வீடியோ போல எப்படி பவுன்சர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை எனக்கு சொல்ல முடியுமா?” எனக் கேட்டார். அப்போது ஸ்டார்க்கிற்கு தமிழ் தெரியும் என்று தெரிந்தது நன்றாக இருந்தது. அதை தெரிந்து கொள்ள அனேகமாக ஆஸ்திரேலிய அணியினர் ஏதேனும் தமிழ் பையனை அணுகியிருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement