ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது.
அத்துடன் 2016 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 5வது வெற்றியைப் பெற்றுள்ளது. மறுபுறம் 5 உலகக் கோப்பைகளை வென்று ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான சாம்பியனாக அணியாக திகழும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றது. மேலும் கடைசியாக பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது.
200 தாண்ட முடியல:
குறிப்பாக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
அந்த வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140, 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 4 தொடர்ச்சியான போட்டிகளில் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.
வரலாறு காணாத பரிதாபம்:
இதற்கு முன் தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஒருமுறை கூட தொடர்ச்சியாக 3 முறைக்கு மேலே 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டானத்தில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 200 ரன்களை கூட தாண்டாத ஆஸ்திரேலியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: சீக்கிரம் அவரை மீட் பண்ணி பேசுங்க.. ரொம்ப பெரிய ஆளா வருவீங்க.. வைபவ் சூர்யவன்ஷிக்கு – ராயுடு அறிவுரை
இதைப் பார்க்கும் ரசிகர்களால் ஆஸ்திரேலிய அணியா இப்படி ஒரு மோசமான சாதனை படைத்துள்ளது? என்று சொல்லாமல் இருக்க முடியாது. இதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாரான ஃபார்மில் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் முக்கியமான ஐசிசி தொடர்களில் அந்த அணி சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டி தூக்குவது குறிப்பிடத்தக்கது.



