WTC Final : இங்க வந்ததே பெருசு தான், ஃபைனலில் அது நடந்தாலும் நாங்க கவலைப்பட மாட்டோம் – டிராவிட் பேட்டியால் ரசிகர்கள் அதிருப்தி

Dravid
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் வழக்கம் போல நியூசிலாந்திடம் ஃபைனலில் சொதப்பி கோப்பையை நழுவ விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது கோப்பையை வெல்ல போராட உள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

அதை விட கடைசியாக இதே இங்கிலாந்தில் கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா கடந்த 9 வருடங்களாக 50 ஓவர், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 வகையான ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு தருணத்தில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் வரலாற்றில் ஐசிசி ஃபைனல்களில் வெற்றிகரமாக செயல்பட்டு 5 உலகக்கோப்பையும் டி20 உலக கோப்பையும் வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியாவை பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா வீழ்த்துவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

கவலைப்பட மாட்டோம்:
ஏனெனில் ஸ்டார்க், கமின்ஸ் போன்ற ஆஸ்திரேலியாவின் பவுலிங் கூட்டணிக்கு நிகராக இந்தியாவின் பவுலிங் கூட்டணி இல்லை. இருப்பினும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்திய மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் இந்தியா வெற்றிக்காக போராட உள்ளது. இந்நிலையில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் வெற்றி பெறவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் அதற்காக நாங்கள் எந்த அழுத்தத்தையும் சந்திக்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

IND vs AUS Siraj SMith

குறிப்பாக அடுத்தடுத்த ஃபைனல்களில் விளையாடும் அளவுக்கு வருடம் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் தாங்கள் இந்த போட்டியின் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்பட போவதில்லை என்ற வகையில் அவர் பேசியுள்ளது இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைக்கிறது. இது பற்றி போட்டிக்கு முந்தைய நாளில் அவர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக இல்லை. அதாவது ஐசிசி கோப்பையை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. அதே சமயம் அதை வென்றால் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஒரு ஐசிசி தொடரை வெல்வது நல்ல உணர்வை கொடுக்கும்”

- Advertisement -

“ஆனால் இந்த விஷயங்களின் பின்னணியையும் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த ஃபைனல் என்பதே கடந்த 2 வருட கடினமான உழைப்பின் உச்சமாகும். லீக் சுற்றில் சந்தித்த பல வெற்றிகளின் உச்சகட்டம் தான் உங்களை இங்கே வரவழைத்துள்ளது. எனவே புள்ளி பட்டியலில் இதர அணிகளை காட்டிலும் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது போன்ற நிறைய நேர்மறையான அம்சங்கள் எங்களிடம் இருக்கின்றன. கடந்த 5 – 6 வருடங்களில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று இங்கிலாந்தில் தொடரை சமன் செய்து விளையாடிய இடங்களில் எல்லாம் எதிரணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தோம்”

Rahul-Dravid

“எனவே அது போன்ற தொடர்ச்சியான வெற்றி நடை ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வெல்லாததால் மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை. அது தான் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று கூறினார். இருப்பினும் ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்காகவே வருடம் முழுவதும் கடினமாக உழைத்து இந்த ஃபைனலுக்கு இந்தியா போராடி வந்துள்ளது.

இதையும் படிங்க:WTC Final : நாளைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இதில் வென்றால் தான் அந்த அந்த உழைப்பு உண்மையாகும் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட நிலையில் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததை பெரிது என்று ராகுல் டிராவிட் தெரிவிப்பது இந்திய ரசிகர்களை கடுப்பாக இருக்கிறது.

Advertisement