WTC Final : நாளைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை ஜூன் 7-ஆம் தேதி துவங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Kohli

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் நாளைய இறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நாளை இந்த இறுதிப்போட்டியில் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மண் கில் ஆகியோர் விளையாடுவது உறுதி. ஏனெனில் கே.எல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் நிச்சயம் சுப்மன் கில்லே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடுவார்.

gill 2

அதோடு வழக்கம் போல மூன்றாவது இடத்தில் புஜாராவும், நான்காவது இடத்தில் விராட் கோலியும் விளையாடுவார்கள். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இடம் பெறாததால் அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் அனுபவ வீரர் அஜின்க்யா ரகானேவும் விளையாடுவது உறுதி. ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டின் இடத்தில் கே.எஸ் பரத் விளையாடுவார் என்று கூறலாம்.

- Advertisement -

அதே போன்று ஆல்ரவுண்டர்களாக சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா 6 ஆவது இடத்திலும், ஷர்துல் தாகூர் 7 இடத்திலும் விளையாடுவார்கள். மேலும் மீதமுள்ள மூன்று இடங்களில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த அணியில் அஸ்வின் இடம்பெறுவது சற்று கடினம் என்றே கூறலாம். அதன்படி நாளைய இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : WTC Final : சச்சின் முதல் ரிச்சர்ட்ஸ் வரை – ஜாம்பவாங்களை மிஞ்சி ஃபைனலில் விராட் கோலி படைக்க உள்ள 5 சாதனைகளின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) சத்தீஸ்வர் புஜாரா, 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) கே.எஸ் பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) உமேஷ் யாதவ்.

Advertisement