- Advertisement -
ஐ.பி.எல்

இம்பேக்ட் பிளேயர் ஐபிஎல்’க்கு நல்லருந்தாலும் இந்தியாவுக்கு ஆபத்து தான்.. ஜாம்பவான் டிராவிட் எச்சரிக்கை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பான போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. முன்னதாக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற விதிமுறை 2023இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலருடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் ஒரு அணிக்காக 12 வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றே சொல்லலாம்.

அந்த விதிமுறைக் காரணமாக எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை பயன்படுத்தி நிறைய அணிகள் அசால்டாக பெரிய ரன்களை குவிக்கின்றன. அதனால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு ஏற்பட்டாலும் பவுலர்களின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக ரபாடா, சர்துல் தாகூர் ஆகியோர் விமர்சித்தனர். இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை ஐபிஎல் தொடரில் சுவாரசியத்தை ஏற்படுத்துவதாக ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டிராவிட் எச்சரிக்கை:

ஆனால் அது சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாகவும் டிராவிட் கூறியுள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அது ஆபத்தான விஷயம் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது வித்தியாசமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. உண்மையில் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்த போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எனக்கு பிடித்ததாக இல்லை”

“அது போட்டியில் இன்னும் அதிகப்படியான போட்டியை ஏற்படுத்துகிறது. அது போட்டியில் கடைசி வரை உயிரைப் பெற்றுக் கொடுக்கிறது. ஆனால் தேசிய அணியை பொறுத்த வரை அது சில சவால்களை விடுகிறது. அந்த விதிமுறையால் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாடுவதன் காரணமாக அதிகப்படியான ரன்கள் அடிக்கப்படுகின்றன. அதன் காரணமாக எந்த அணியும் போட்டிக்கு வெளியே இருப்பதில்லை”

- Advertisement -

இந்திய அணிக்கு பயனில்லை:

“ஏனெனில் 8, 9வது இடத்தில் உங்களுக்கு பேட்ஸ்மேன் விளையாட வருவார். அதனால் 6 – 7 விக்கெட்டுகள் இழந்தாலும் நீங்கள் கவலைப்படாமல் சிக்சர் அடிக்கச் செல்வீர்கள். ஆனால் ஒரு பயிற்சியாளராக நீங்கள் 11 – 11 வீரர்கள் விளையாடும் அணிக்குத் தகுந்தார் போல் ஆல் ரவுண்டர்களை உருவாக்க விரும்புவீர்கள். அந்த விதிமுறையால் குறிப்பிட்ட வீரர்கள் அதிகமாக பேட்டிங் அல்லது பவுலிங் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்”

இதையும் படிங்க: பெங்களூருவில் சிஎஸ்கே ரசிகர்கள் டென்ஷன் பண்ணுவாங்க.. ஆர்சிபி ரசிகர்கள் அவங்க மாதிரி இல்ல.. கோலி பேட்டி

“இருப்பினும் ஆல் ரவுண்டர்கள் இருப்பது இப்போதும் போட்டியில் சமநிலையைக் கொண்டு வரும். ஆனால் தற்போது சரியான ஆல் ரவுண்டர் இல்லையென்றால் அந்த விதிமுறையை பயன்படுத்துகிறார்கள்” என்று கூறினார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த வருடமே அந்த விதிமுறைக்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -