ஆசியக்கோப்பை : இந்திய பயிற்சியாளர் டிராவிடுக்கு கொரோனா உறுதி – புதிய பயிற்சியாளர் யார்?

Dravid-1
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக ஆசிய கண்டத்தினை சேர்ந்த ஆறு அணிகள் பல பரீட்சை நடத்த இருப்பதினால் இந்த ஆசிய கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட வேளையில் சில முக்கிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் செல்ல மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

dravid 1

ஆகஸ்ட் 28-ஆம் தேதி துபாயில் நடக்கும் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க தயாராகிவிட்டது. இந்நிலையில் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் இந்திய அணியுடன் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் தற்போது வரை இந்திய அணி நிர்வாகம் பயிற்சியாளர் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று சரியான பிறகு அவர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வார் என்று தெரிகிறது. அதனால் முதல் சில போட்டிகளில் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமல் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : போட்டி இன்னும் முன்னாடியே முடிஞ்சிருக்கனும். வெற்றிக்கு பிறகு கேப்டன் – ராகுல் பேசியது என்ன?

ஒருவேளை ராகுல் டிராவிட் முழு தொடரையும் தவற விடுவாராயின் அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியுடன் இடைக்கால பயிற்சியாளராக பயணித்த வி.வி.எஸ் லட்சுமணனே ஆசிய கோப்பை தொடருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement