IND vs ZIM : போட்டி இன்னும் முன்னாடியே முடிஞ்சிருக்கனும். வெற்றிக்கு பிறகு கேப்டன் – ராகுல் பேசியது என்ன?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த இந்திய அணியானது நேற்றைய மூன்றாவது போட்டியிலும் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரினை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

Shubman Gill IND vs ZIM

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் அடித்த அபார சதத்தின் மூலமாக இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெடுகளை இழந்து 289 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை மட்டுமே குவித்தது. ஜிம்பாப்வே அணி சார்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா 115 ரன்கள் குவித்தார். அவரது போராட்டத்திற்கு பிறகு இறுதியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருந்தது.

IND vs ZIm Ishan Kishana

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரின் வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த தொடரை வென்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரினை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இருந்தாலும் இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும். ஆனால் போட்டி இறுதி வரை சென்றது. இருந்தாலும் கடைசி நேரத்தில் பவுலர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மிகச் சிறப்பாக பந்துவீசி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க : விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்கருக்கு – நச்சுன்னு பதிலளித்த அப்ரிடி

இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது 100 ஓவர்கள் விளையாடியது மிகவும் களைப்பாக உள்ளது. ஆனாலும் நான் இன்னும் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement