விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்கருக்கு – நச்சுன்னு பதிலளித்த அப்ரிடி

Afridi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்திய அணிக்காக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியின் போது சதம் அடித்த விராட் கோலி அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் இன்று வரை தவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக அண்மையில் நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழுந்து வெளியேறிய விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டது.

Kohli

- Advertisement -

மேலும் இனிவரும் போட்டிகளிலும் விராட் கோலி இவ்வாறு செயல்படுவாராயின் அவரது இடமும் இந்திய அணியில் கேள்விக்குறியாகும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் விராட் கோலியின் மீது முழுநம்பிக்கை வைத்த இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பினை வழங்கியுள்ளது.

என்னதான் விராட் கோலி பேட்டிங்கில் சறுக்களை சந்தித்து வந்தாலும் அவருக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்தபடி உள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடியும் இந்திய விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அடிக்கடி இணையதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கத்தை உடைய அப்ரிடியிடம் ஒரு ரசிகர் :

Kohli

விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் இப்படி மோசமாக உள்ளது. அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் ? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த அப்ரிடி அது அவருடைய கையில் தான் உள்ளது. நிச்சயம் கடினமான நேரங்களில் தான் நல்ல வீரரை கண்டுபிடிக்க முடியும் என்று சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.

- Advertisement -

எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி இந்த தொடரில் தனது பார்மை மீட்டெடுப்பார் என்று பலரும் தங்களது ஆதரவுகளை வழங்கி வரும் வேளையில் அப்ரிடியும் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ள டாப் 5 அணிகளின் பட்டியல் இதோ

அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் டி20 உலக கோப்பையின் போது விராட் கோலி இந்திய அணியின் முக்கியமான வீரராக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement