கோரிக்கையை நிராகரித்த முன்னாள் நட்சத்திர வீரர்.. பயிற்சியாளர் குழுவை அறிவித்த பிசிசிஐ.. ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடியும் இந்தியா கோப்பையை வெல்லத் தவறியதால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதே போலவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவி காலமும் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.

2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் என்சிஏவில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த அவர் ரவி சாஸ்திரி விலகிய 2021இல் இந்திய சீனியர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த பொறுப்பில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்கள் செய்ததை வழக்கமாக வைத்திருந்த அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 4 முக்கியமான தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தொடரும் டிராவிட்:
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 2023 உலகக் கோப்பையுடன் பதவி காலம் நிறைவுக்கு வருவதால் மேற்கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வேண்டாம் என்ற கருத்துக்களை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த சூழ்நிலையில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஆசிஸ் நெஹ்ரா மற்றும் என்சிஏ இயக்குனராக இருக்கும் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக நியமிப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.

அதில் நெஹ்ராவை விட அதிகப்படியான அனுபவமும் ஜாம்பவான் அந்தஸ்தும் கொண்டிருப்பதால் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவித்தன. சொல்லப்போனால் அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியாவின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் குஜராத் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் ஆஷிஸ் நெஹ்ரா இந்திய அணியில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் மீண்டும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்பார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பாராஸ் மாம்ப்ரே, விக்ரம் ரத்தோர், டி திலிப் ஆகிய துணைப் பயிற்சியாளர்களும் அதே பணிகளில் தொடர்பாக என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் இவர்களுக்கான பதவி காலம் பற்றி பிசிசிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்ததோடு சேர்த்து ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்த – கிளென் மேக்ஸ்வெல்

எனவே குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ராகுல் டிராவிட் இந்தியாவின் பயிற்சியளராக மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் டிவிஎஸ் லக்ஷ்மண் மீண்டும் என்சிஏ இயக்குனராகவும் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மீண்டும் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்பது சிலர் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement