சாதனை முக்கியமல்லன்னு ராகுல் டிராவிட் என்னை பிரைன் வாஷ் பண்ணாரு, ரசிகர்கள் அறியாத பின்னணியை – பகிர்ந்த அஸ்வின்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்து 200 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர்.

Jaiswal IND vs WI

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறாத வீரர்களில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் என்ற சாதனையும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை சாய்த்த 3வது இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார். அந்த வகையில் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்த அவருக்கு சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைக்காததை நினைத்து இப்போதும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பிரைன் வாஷ் பண்ணாரு:
குறிப்பாக உலகிலேயே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக உலக சாதனை படைத்திருந்தும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா ஆகியோர் அவரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் நம்முடைய கேரியரில் எவ்வளவு விக்கெட்டுகளை எடுக்கிறோம் என்பதை விட எந்த மாதிரியான நல்ல நினைவுகளை உருவாக்குகிறோம் என்பதே பெரிய சாதனை என்று தம்முடைய மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு ராகுல் டிராவிட் மூளைச்சலவை செய்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

Rahul Dravid Ashwin

குறிப்பாக முதல் முறை பயிற்சியாளராக சந்தித்த போது அதை ராகுல் டிராவிட் தமக்கு சொன்னதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கேரியரை திரும்பி பார்க்கும் போது அது எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டது என்பதை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரையும் சேர்த்தால் அது 15 முதல் 16 வருடங்கள் கொண்ட பயணமாக இருக்கும். அது அப்படி தான் சென்றது என நான் அனைவரிடமும் சொல்வேன்”

- Advertisement -

“மேலும் ராகுல் டிராவிட் முதல் முறையாக பயிற்சியாளராக வந்த போது நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறீர்கள் எவ்வளவு விக்கெட்டுகள் எடுக்கிறீர்கள் என்பதை மறந்து விடுவீர்கள் என்று தெரிவித்தார். மாறாக ஒரு அணியாக இணைந்து செயல்படுவதில் எந்த வகையான நல்ல நினைவுகளை உருவாக்குகிறார்கள் என்பதே உங்களுடன் எப்போதும் நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார். அந்த கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். சொல்லப்போனால் அதை நான் கடைபிடிப்பதற்கு தேவையான மூளைச்சலவையை அவர் செய்தாரா என்பது எனக்கு தெரியாது”

“ஆனால் வேகமாக நகர்ந்து வந்துள்ள என்னுடைய கேரியரில் அனைத்தும் அதிவேகமாக முடிந்து விட்டதால் என்ன நடந்தது என்பதை என்னால் மீண்டும் யோசித்து நினைவு கொண்டு வர முடியவில்லை. எனவே இந்த விளையாட்டு எனக்கு வழங்கியுள்ள பயணத்திற்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். தற்சமயத்தில் இது போன்ற எத்தனை தருணங்கள் எனக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் எது வந்தாலும் அது முழுமையாக அனுபவிக்கும் முயற்சிப்பேன்”

இதையும் படிங்க:IND vs WI : இனியாச்சும் அவரோட அருமைய தெரிஞ்சுக்கோங்க, ரோஹித் சர்மாவைை விமர்சித்த ப்ரக்யான் ஓஜா

“மேலும் லாக் டவுன் வந்த பின்பு தான் இனிமேல் நம்முடைய கேரியரில் நடக்கும் தருணங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். குறிப்பாக அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் சரி அல்லது ஓய்வு பெற்றாலும் சரி அந்த அனைத்தையுமே நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement