IND vs WI : இனியாச்சும் அவரோட அருமைய தெரிஞ்சுக்கோங்க, ரோஹித் சர்மாவைை விமர்சித்த ப்ரக்யான் ஓஜா

Ojha
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்க பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெடுகளை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அறிமுகமாக களமிறங்கிய அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Jaiswal IND vs WI

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் 89* ரன்களும் அறிமுகமாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 100* ரன்களும் எடுத்து 205 ரன்கள் ஓப்பனிங் பார்னஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 2வது நாள் உணவு இடைவெளியில் 205/0 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு ஆரம்பத்திலேயே பிரகாசமாகியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் பந்து வீச ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே தம்முடைய தரத்தை காட்டும் வகையில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 60 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இப்போவாச்சும் புரிஞ்சுக்கோங்க:
மேலும் சந்தர்பால் தந்தை – மகன் ஆகியோரை அவுட்டாக்கிய முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனை படைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறாத வீரர்களில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த பவுலர் என்ற சாதனையும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்தியர் என்ற சரித்திரமும் படைத்தார். மேலும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் 450க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை விட அதிக தொடர் நாயகன் விருது வென்ற இந்தியராக சாதனை படைத்துள்ள அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக உலகிலேயே இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கிய வீரர் என்ற உலக சாதனை படைத்த அவரை ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையில் 5 இடதுகை வீரர்கள் இருந்தும் கேப்டன் ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சச்சின் உட்பட பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்த அஸ்வின் இந்திய அணிக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை நிரூபித்துள்ளதாக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எந்த வகையான சுழலில் நடந்திருந்தாலும் அதில் அசுத்தம் திறமை அஸ்வினிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை மறைமுகமாக விமர்சித்து பேசியது பின்வருமாறு. “அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகி விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு 4 சதங்களையும் அடித்துள்ளார். அந்த அனுபவத்தால் இந்த தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை செட்டப் செய்து அவர் அவுட் செய்தது அபாரமாக இருந்தது”

Pragyan Ojha

“குறிப்பாக வேகத்தில் மாற்றங்களை செய்து அஸ்வின் வீசிய பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திண்டாடினர். மேலும் டெயில் எண்டர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இன்னிங்ஸை மிக விரைவாக முடித்த அவர் இந்திய அணிக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை காட்டினார்”

இதையும் படிங்க:IND vs WI : ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இப்படி ஒரு நிலைமையா? கண்ணீர் சிந்தும் சி.எஸ்.கே ரசிகர்கள் – அடப்பாவமே கஷ்டமா தான் இருக்கு

“பொதுவாக சாம்பியன் வீரர்கள் எந்த வகையான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய திறமை மற்றும் அனுபவத்தை பயன்படுத்தி அணிக்கு தேவைப்படும் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். அந்த வகையில் பந்தில் எப்போதும் ஸ்பெஷலாக செயல்படும் அஸ்வின் அதை தொடர்ந்து வருகிறார்” என்று கூறினார்.

Advertisement