
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதே போல ஒரு வீரராக வெல்லாத உலகக்கோப்பை பயிற்சியாளராக வென்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாம்பியனாக விடை பெற்றார்.
இதைத் தொடர்ந்து பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய குழுவுக்கு ராகுல் டிராவிட் ஆதரவளித்து வருகிறார். குறிப்பாக ஜாம்பவானாக இருந்தாலும் ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து அவர் இந்திய வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஆதரவளித்தது வைரலானது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் 2028 இலக்கு:
அதில் 1900க்குப்பின் 124 வருடங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 உலகக் கோப்பைகளைப் போலவே 2008 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை இந்திய அணி இலட்சியமாகக் கொண்டுள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஏனெனில் உலகக் கோப்பை போலவே ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை மிகப்பெரிய கௌரவமாக இந்திய அணியினர் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பாரிஸில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “இந்திய அணியின் உடைமாற்றும் அறையில் ஏற்கனவே நான் சில உரையாடல்களை கேட்டுள்ளேன். எங்கள் அணியில் 2026 டி20 உலகக் கோப்பை, 2027 உலகக் கோப்பை பற்றி பேசிய வீரர்கள் 2028இல் ஒலிம்பிக் இருப்பதாக பேசியதையும் கேட்க முடிந்தது”
“குறிப்பாக எங்கள் வீரர்கள் அந்த தங்கப்பதக்கத்தை வென்று விருது மேடையில் உயரே நிற்க விரும்புகின்றனர். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் பேசுவதற்கும் அவர்கள் விரும்புகின்றனர். நாங்கள் ஒலிம்பிக்கில் கார்ல் லெவிஸ் தங்கப்பதக்கம் வென்றதைப் பார்த்து வளர்ந்தோம். இது போன்ற மகத்தான விளையாட்டு தொடரில் நீங்களும் ஒரு அங்கமாக இருப்பதை எப்போதும் விரும்புவீர்கள்”
இதையும் படிங்க: இந்தியா இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும் – ரூல்ஸ் கூறுவது என்ன?
“எனவே அதில் கிரிக்கெட்டும் விளையாடப்படுவதை பார்ப்பது என்னுடைய கனவாகும். அந்தத் தொடரில் எங்களுடைய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கப்பதக்கம் வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார். முன்னதாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 ஃபார்மட்டில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தங்கப் பதக்கம் வென்றது. அதே போல 2028 ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.