கான்ட்ராக்ட் போட்டு டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

Dravid
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை வென்றிருந்தாலும், ஐசிசி நடத்திய கோப்பையை வென்றதில்லை என்ற குறை மட்டுமே அவரிடம் உள்ளது. அதை தவிர்த்து இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தனது அற்புதமான பணியை செய்துள்ளார் என்று கூறலாம்.

shastri

- Advertisement -

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவரோடு சேர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் ? செயல் படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

அதே வேளையில் பிசிசிஐ-யும் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் தீவிரமாக இறங்கி இருந்தது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பலரும் தங்களது விருப்பத்தை பிசிசியிடம் தெரிவிக்க பிசிசிஐ தலைவர் கங்குலி இந்திய முன்னாள் வீரர் ஒருவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.

dravid 1

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள் பலரிடம் பேசிய பின்பு தற்போது டிராவிட்டை அதிகாரபூர்வமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட் அந்த பதவியை ராஜினாமா செய்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இவருக்கு காத்திருக்கு. தோல்விக்கு பிறகு – இளம்வீரரை பாராட்டிய மோர்கன்

அதேவேளையில் பிசிசிஐ அவரை இரண்டு ஆண்டுகாலம் பயிற்சியாளராக செயல்பட காண்ட்ராக்ட் போட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கும் அவர் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றபடி பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் தொடர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement