இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இவருக்கு காத்திருக்கு. தோல்விக்கு பிறகு – இளம்வீரரை பாராட்டிய மோர்கன்

Morgan-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது.

CSk

- Advertisement -

அந்த அணியின் துவக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்தனர். பின்னர் 91 இருக்கும் வேளையில் கொல்கத்தா அணி முதல் விக்கெட்டை இழந்தது. வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற பின்னர் அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினார்கள். ஒரு கட்டத்தில் கில்லும் 50 ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி சரிவை சந்தித்தது.

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் 10 ரன்களை கூட எடுக்கவில்லை. இறுதியில் சிவம் மாவி 20 ரன்களும், பெர்குசன் 18 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் நான்காவது முறையாக தோனியின் தலைமையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சென்னை அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வர ரசிகர்களும் சமூக வலைதளம் மூலமாக சென்னை அணியை வாழ்த்தி வருகின்றனர்.

Venkatesh-iyer-3
Venkatsh KKR

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் போராடிய விதம் நிச்சயம் பெருமை அடைய வைக்கிறது. இருப்பினும் இன்றைய நாள் எங்களுடைய நாளாக அமையவில்லை. வெங்கடேஷ் ஐயர் பெரிய எதிர்காலத்திற்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : ஷர்துல் தாகூர் மட்டுமல்ல மேலும் 2 வீரர்களுக்கு வாய்ப்பு – விவரம் இதோ

அவருடன் சேர்ந்து கில்லும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் இவர்கள் இருவரும் சிறப்பான வீரர்களாக வருங்காலத்தை ஆள்வார்கள் என்றும் வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் கெரியரில் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார் எனவும் இயான் மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement