தென்னாபிரிக்க தொடரிலும் இவர்தான் விக்கெட் கீப்பராம். அப்போ இவரோட ஆட்டம் க்ளோஸ் தான் – இதுவும் நல்லாத்தான் இருக்கு

- Advertisement -

தோனிக்கு பிறகாக அவர் இடத்தை நிரப்புவது இந்திய அணிக்கு கடும் சவாலாக உள்ளது. தற்போது வரை அந்த விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப இந்திய அணி கடுமையாக போராடி வருகிறது. எனவே தோனியின் இடத்தினை நிரப்ப ரிஷப் பண்ட் ஆயத்தமாகி வருகிறார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பெரிதாக தன் இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு சாதிக்கவில்லை.

Ind

- Advertisement -

அவ்வப்போது அரை சதம் அடித்தாலும் தனது இடத்தை தக்க வைக்க அது போதாது. டெஸ்ட் ,ஒருநாள், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் சொதப்பி வருகிறார் பண்ட். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் போது ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் கேஎல் ராகுல் அவருக்கு பதிலாக தற்காலிக விக்கெட் கீப்பராக நிறுத்தப்பட்டார் .

விக்கெட் கீப்பராக செயல்பட்டபோது அற்புதமாக பேட்டிங் செய்த அவர் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரிர் என இரண்டிலுமே விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்தார்.

Rahul

இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் இடத்தை அவர் பிடித்துக் கொள்வார் என்றே தெரிகிறது . தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார் . ஆனால் அவர் கீப்பர் என்று அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

பெரும்பாலும் கேஎல் ராகுல் தான் கீப்பராக இடம் பெறுவார் என்றே தெரிகிறது. இப்படி பார்த்தால் பாண்டியாவும் மீண்டும் அணிக்குள் சேர்ந்துவிட்டார். இதனால் ரிஷப் பண்ட்டிற்கு இடம் கிடைப்பது சற்று கடினம் என்று தெரிகிறது.

Pant 1

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி : கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்.

Advertisement