2வது போட்டி : ராகுலின் வருகையால் அணியில் இடத்தை இழக்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

Rahul-1
Advertisement

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் துணை கேப்டனான ராகுல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் வேளையில் ராகுலின் சகோதரி திருமணம் காரணமாக அவர் அந்த திருமண நிகழ்ச்சிக்காக விடுப்பு எடுத்துக் கொண்டதால் தற்போது இரண்டாவது போட்டியில் மீண்டும் அணியில் இணைய உள்ளார்.

Cup

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள வேளையில் ராகுல் மீண்டும் அணிக்குத் இருப்பதால் எந்த வீரர் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா தொடரின்போது துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் இந்த தொடரிலும் துவக்க வீரராகவே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் துவக்க வீரராக விளையாடினால் இஷான் கிஷன் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் இல்லையெனில் மற்றபடி மிடில் ஆர்டரில் விளையாட முடிவு செய்தால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

rahul

இந்திய அணி ஓபனர்களாக வலதுகை இடதுகை பேட்ஸ்மேன்கள களமிறக்க நினைக்கும் பட்சத்தில் ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக தொடர்வார்கள் என்றும் அவருக்கு பதிலாக கடந்த முதலாவது போட்டியில் அறிமுகமான தீபக் ஹூடா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் இணைவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ராகுல் இணைவதன் மூலம் நிச்சயம் இஷான் கிஷன் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவரது இடம் பறிபோக வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : முதல் போட்டியில் பண்ண இந்த தப்ப இனிமேல் செய்யாதீங்க – விராட் கோலியை எச்சரித்த சுனில் கவாஸ்கர்

ராகுல் ஏற்கனவே துவக்க வீரராக சற்று சுமாரான ஆட்டத்தையே ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்தி வருவதாலும், மிடில் ஆர்டரில் இறங்கும்போதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாலும் நிச்சயம் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் அவருக்கு பதிலாக தீபக்ஹூடா வெளியேறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்றே கூறலாம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement