தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்ட 22 வயது இந்திய இளம்வீரர் – குவியும் வாழ்த்துக்கள்

Chahar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களின் திருமணச் செய்தி என்றாலே எப்போதுமே இணையத்தில் அதிக அளவு வைரலாவது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறும். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் தனது திருமணத்தை 22 வயதிலேயே முடித்துள்ளதால் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதன்படி இந்திய அணிக்காக 6 டி20 போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள 22 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாகர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

அவர்களது திருமணம் கோவாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்று முடிந்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 42 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2019-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது பார்மில் சற்று தொய்வு ஏற்படவே இந்த ஆண்டு மும்பை அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனாலும் அவரை ஒரு நல்ல தொகைக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வரும் 26-ஆம் தேதி துவங்க இருக்கும் வேளையில் பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த அவர் தற்போது ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே தனது திருமணத்தை முடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தனது காதலியை கரம் பிடித்துள்ளார்.

- Advertisement -

கோவாவில் நடைபெற்ற இவர்களது இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதால் அவருடன் விளையாடி வரும் சக வீரர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்களுக்காக வருகின்ற சனிக்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரான ராகுல் சாகர் தனது இளம் வயதிலேயே திருமணத்தை முடித்துள்ளதால் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க : வீணடிக்கப்பட்ட திறமைக்கு எடுத்துக்காட்டாய் ஓய்வு பெற்ற இந்திய வீரர் – ஓய்விற்கான காரணம் இதுதான்

மேலும் தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அதோடு அவரது சகோதரர் தீபக் சாஹரும் அந்த திருமண விழாவின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement