ராகீம் கார்ன்வெல் எடையைப்பற்றி பேசும் உங்களுக்கு. அவருடைய திறமையை பற்றி தெரியுமா ?

Rahkeem-Cornwall
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடை பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

Rahkeem-Cornwall-1

- Advertisement -

அதனை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். இவரது உயரம் 6.6 அடி இவரது எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான வெயிட் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு அவர் தேர்வானது அனைவரும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் உலகில் மிக அதிக எடை கொண்ட வீரர் என்று இவர் கருதப்படும் இவர் உடல் எடை மற்றும் பிரமாண்ட உடலைமைப்பு குறித்து அனைவரும் பேசிக் வருகின்றனர். ஆனால் அவருடைய திறமை வேறு அவர் இதுவரை 55 முதல் தர போட்டியில் ஆடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 17 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடும் தன்மை கொண்டவர் அவருடைய திறமையை பற்றி யாரும் பேசாமல் அவருடைய அடையாளமாக அவரது உருவத்தை கணக்கில் கொள்வது தவறான விடயம் ஆகும். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆடும் போது அவருடைய திறமை வெளிவரும் மேலும் தற்போது அவருடைய எடையை குறைப்பதற்கான பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருவதாக அணி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement