மலைபோன்ற வீரர்னு பாத்தா மலையையே களமிறக்கி மிரட்ட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் – இவரோட வெயிட் என்ன தெரியுமா ?

Rahkeem-Cornwall-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடை பட்டுள்ளதால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

Rahkeem-Cornwall

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார்.

இவரைப்பற்றிய சிறப்பம்சம் என்னவெனில் இவர் ஒரு வித்தியாசமான கிரிக்கெட் வீரர் ஆவார். ஆம் உண்மையிலேயே இவர் வித்தியாசமானவர் தான். ஏனென்றால் இவரது உயரம் 6.6 அடி இவரது எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான வெயிட் உடையவர். விசித்திரமான இவரது தோற்றம் மிரளவைக்கும் படி உள்ளது.

rahkeem

அப்படி இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இவர் விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக எடையுடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை இவர் படைப்பார். வெஸ்ட் இண்டீசின் முதல் தரப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் பயிற்சியின் போது இந்திய அணியின் வீரர்களான கோலி புஜாரா ரகானே போன்றவர்களை ஏற்கனவே வீழ்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement