பிரமாதமான கேட்சை பிடித்து மீண்டும் கவனத்தை ஈர்த்த உலகின் அதிகஎடை கொண்ட வீரர் – வைரலாகும் வீடியோ

கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கு பிறகு நான்கு மாத இடைவெளி கழித்து, 117 நாட்கள் கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

wi

இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமநிலைப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகின் மிக அதிக எடை கொண்ட வீரர் என்று அழைக்கப்படும் ரஹீம் கார்ன்வெல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஸ்பின் பௌலிங் தெரிந்த ஆல்ரவுண்டர் ஆன இவர் கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர்.

அறிமுகமான போதே அவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று இந்திய தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். அதனை தொடர்ந்து இன்று அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரரான பர்ன்ஸ் கேட்சை ஸ்லிப்பில் நின்ற படி அசாத்தியமாக பிடித்து அசத்தினார். அவரின் இந்த கேட்ச்விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் அவர் பிடித்த இந்தக்கேட்ச் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அப்போதைய உலகின் அதிக எடை கொண்ட வீரரான லீவராக் பிடித்த கேட்ச்சை நியாபகப்படுத்தியது என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.