இதைவிட மோசமா யாருமே அவுட் ஆக முடியாதுனு சொல்லுமளவிற்கு மோசமான முறையில் அவுட் ஆகிய – மலைமனிதன்

Rahkeem-Cornwall-1
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் தற்போது கரீபியன் பிரீமியர் போட்டிகளின் லீக் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் கயானா அணி மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் உலகின் மிக அதிக எடை கொண்ட வீரர் என்ற பெருமையை உடைய ராகீம் கார்ன்வால் ரன்அவுட் ஆன விதம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கார்ன்வால் சிங்கில் ஓட ஆசைப்பட்டு கீப்பர் நோக்கி ஓடுகிறார்.

அப்போது பந்தை பிடித்த பீல்டர் நேராக கீப்பரை நோக்கி த்ரோ செய்ய மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும் கார்ன்வால் கிரீஸ் அருகே சென்று கூட பேட்டை வைக்காமல் ஓடிச்சென்று தனது மெத்தனத்தால் அவுட்டானார். அவரின் இந்த ரன்அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement