140 கிலோ என்று ஏளனம் செய்தீர்களே. அவர் ஆப்கனிஸ்தான் அணியை என்ன பண்ணியிருக்காரு பாருங்க

Rahkeem

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியாவில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டி கடந்த 27ஆம் தேதி தொடங்கி மூன்றாம் நாள் காலையான இன்று முடிவடைந்தது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான ராகீம் கார்ன்வால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Rahkeem 1

தற்போது 24 வயதாகும் இந்த 140 கிலோ எடை கொண்ட இந்த பிரம்மாண்ட வீரர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -